சேலம் மாவட்ட எஸ்.பியாக இருப்பவர் சிவக்குமார், இவருக்கும், சேலம் மாநகர துணை ஆணையர் லாவண்யாவுக்கு பிடிக்காது. இருவரும் ஒரே கேடர் அதிகாரிகள் என்றபோதிலும் எதிரும் புதிருமாக செயல்பட்டு வந்தனர். லாவண்யா எஸ்.பி. பதவிக்கு வர முயற்சிகள் மேற்கொண்டாராம். இந்த நிலையில் எஸ்.பி. சிவக்குமார், தனது வாட்ஸ் அப் ஸ்டேடசில், துணை ஆணையர் லாவண்யா பெயரை போட்டு, நல்ல பதவியை பிடிக்க வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார் என பதிவிட்டார்.
இந்த பதிவு வெளியான நிலையில் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து துணை ஆணையர் உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தார். யாரோ அனுப்பிய தகவல், அதை தனது மனைவிக்கு அனுப்பும்போது தவறுதலாக அது வெளியாகி விட்டதாக எஸ்.பி. சிவக்குமார் பதில் அளித்தார். இந்த நிலையில், எஸ்.பி. சிவக்குமாருக்கு சேலம் டிஐஜி ராஜேஸ்வரி மெமோ கொடுத்து உள்ளார். அதில் வாட்ஸ் அப் ஸ்டேடஸ் குறித்து விளக்கம் அளிக்கும்படி கேட்டு உள்ளார்.