அகழ் கலை இலக்கிய மன்றத்தின் சார்பாக, 1330 குறளுக்கான 1330 கதைகள், 133 எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்ட வருகிறது. இதில் 15 குழந்தைகள் கதைகளை உருவாக்கி இருக்கின்றனர். அவர்களுக்கான பாராட்டு விழா, பெரம்பலூரில் தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக, குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சு. விஜயலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். பாவேந்தர் பாரதிதாசன் இலக்கிய மன்றத்தின் செயலாளர் கி. முகுந்தன், பாடாலூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் அகவி, தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற பெரியசாமி போன்றோர் முன்னிலை வகித்தனர். வெண்பாவூர், அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் இ. தாஹிர் பாஷா, வேப்பந்தட்டை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறை தலைவர், க. மூர்த்தி, அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் கணினி பொறியியல் துறை செல்வகுமார் இளம் பேச்சாளர் காருண்யா போன்றோர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியை அகழ் பொறுப்பாளர்கள் ரா. திவ்யாதர்ஷினி, சி. புவனேஸ்வரன், சி. பிரகதி, சி. ஸ்ரீகாந்த், வெ. அருண்மொழி, பெ. கவிப்பிரியா போன்றோர் ஒருங்கிணைத்து நடத்த, அகழ் கலை இலக்கிய மன்றத்தின் நிறுவனர் செ. வினோதினி வரவேற்புரை வழங்க, அகழ் பொறுப்பாளர் ஸ்ரீகாந்த் நன்றியுரை வழங்க, பேச்சாளர் கார்த்திக் தொகுப்பு வழங்கினார். பெரம்பலூரின் இலக்கிய ஆளுமைகள், குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருக்குறளுக்கு கதைகள் உருவாக்கிய சிறுவர்-சிறுமிகளுக்கு பாராட்டு விழா..
- by Authour
