உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீதர் காலனியில் உள்ள பொன்முடியின் வீட்டிற்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். விழுப்புரத்தில் உள்ள பொன்முடியின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
மத்திய பாதுகாப்பு படையுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, விழுப்புரம் என அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான ஒன்பது இடங்களில் அமலாக்கத்தூறை சோதனை மேற்கொண்டு வருவதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி எம்.பியுமான கவுதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது.
கடந்த மாதம் 13 ம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.இதையடுத்து செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு இருந்தார். இந்த நிலையில், மூத்த அமைச்சர்களில் ஒருவரான பொன்முடி வீட்டில் இன்று நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனை தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் இன்று எதிர்க்கட்சித்தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அமைச்சர் வீட்டில் சோதனை நடத்துவது எதிர்கட்சிகளை மிரட்டும் பாஜகவின் திட்டம என்று தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இது குறித்து திமுக முன்னணி தலைவர்கள் கூறும்போது, மக்களவை தேர்தலில் தோல்வி நிச்சயம் என்பதை அறிந்து கொண்ட பாஜக அதற்குள் எதிர்க்கட்சிகளை சோதனை என்ற பெயரில் களங்கப்படுத்தி விட வேண்டும். அதன் மூலம் தேர்தலில் பலன் கிடைக்குமா, குறிப்பாக தமிழகத்தில் ஏதாவது பலன் கிடைக்குமா என்ற எண்ணத்தில் இந்த சோதனை நடக்கிறது.
இந்த சோதனையின் பின்னணியில் பாஜக இருப்பதாகவும், பாஜக ஏவிவிட்ட இடத்திற்கு பாயும் அம்பாக அமலாக்கத்துறை செயல்படுகிறது என்றும் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.