திருச்சி தாயனூர் கேர் கல்லூரி வளாகத்தில் வரும் 27ம் தேதி மாநில அளவிலான வேளாண் கண்காட்சி நடக்கிறது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இதனை துவக்கி வைக்கிறார். வேளாண் கண்காட்சி நடைபெறும் இடத்தை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு, வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அமைச்சர்களுடன் மேயர் அன்பழகன், கலெக்டா் பிரதீப் குமார் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதே போல் டெல்டா மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் திருச்சி ராம்ஜி நகரில் நடைபெற உள்ளது. இதில் டெல்டா மண்டலத்திற்கு உட்பட்ட 15 திமுக மாவட்டங்களில் மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்டத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். முகவர்கள் கூட்டம் நடைபெறும் இடத்தையும் அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.