Skip to content

கோழிக்கறி வாங்கி தந்தா கத்தரிக்காய் குழம்பு வைத்த மனைவி…வெட்டிக்கொன்ற கணவன்..

  • by Authour

தெலுங்கானா மாநிலம் மஞ்சரில் மாவட்டம் கிஷ்தம்பேட் கிராமத்தை சேர்ந்தவர் போஷம். இவரது மனைவி சங்கரம்மா (45). கடந்த புதன்கிழமை வீட்டில் கோழிக்குழம்பு செய்யும்படி போஷம் தனது மனைவி சங்கரம்மாவிடம் கோழிக்கறி வாங்கிக்கொடுத்துள்ளார். ஆனால், சங்கரம்மா கோழிக்குழம்பு வைக்காமல் கத்தரிக்காய் குழம்பு வைத்துள்ளார். இதனால், மதுபோதையில் போஷம் மனைவி சங்கரம்மாவிடம் இரவு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர், இரவு இருவரும் தங்கள் ரூமில் தூங்கியள்ளனர்.  பக்கத்து ரூமில் இளைய மகன் சந்தோஷ் உறங்கியுள்ளார்.  இந்நிலையில், மதுபோதையில் இருந்த போஷம் அதிகாலையில்  வீட்டிலிருந்த கோடாரியால் தூங்கிக்கொண்டிருந்த மனைவி சங்கரம்மாவை சரமாரியாக வெட்டிகொன்றார். மனைவியை கோடாரியால் கழுத்தில் வெட்டிக்கொன்ற போஷம் வீட்டில் இருந்து உடனடியாக தப்பியுள்ளார்.  தாயின் அலறல் சத்தம் கேட்டு விழிந்த மகன் சந்தோஷ் ரத்த வெள்ளத்தில் தாய்  கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தான்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து சங்கரம்மாவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய போஷமை தீவிரமாக தேடி வருகின்றனர். கோழிக்குழம்புக்கு பதில் கத்தரிக்காய் குழம்பு வைத்ததால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கோடாரியால் வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *