கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள மலர்ச்சியூரை சேர்ந்தவர் சண்முகம் (40). இவர் சின்ன தாராபுரத்தில் பேக்கரி நடத்தி வருகிறார். இந்த நிலையில் வீட்டை பூட்டி விட்டு பேக்கரிக்கு சென்று விட்டார். மீண்டும் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தபோது வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர். மேலும் வீட்டில் உள்ள 4 பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தவை பார்த்து சண்முகம் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து சின்னதாராபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலையடுத்து சின்னதாராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் கைரேகை எடுத்து விசாரணை நடத்தியதில் மூன்று பவுன் தங்கச் செயின் மேலும் 60 கிராம் வெள்ளி கொலுசு, செல்போன் காணவில்லை என வீட்டில் உரிமையாளர் கூறினார். இது குறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் பட்டப்பகலில் நடந்ததால் சின்னதாராபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குறிப்பாக 2 நாட்களுக்கு முன்பு வேலாயுதம்பாளையம் பகுதியில் 115 பவுன் தங்க நகை திருட்டு, அதேபோல் கரூர் நகரப் பகுதியில் மூதாட்டி இடம் செயின் பறிப்பு உள்ளிட்ட மாவட்ட முழுவதும் பல்வேறு பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.