தஞ்சாவூர் அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தஞ்சாவூர் மட்டுமின்றி திருவாரூர் நாகப்பட்டினம் புதுக்கோட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிகிச்சைக்காக கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் வருவது வழக்கம். மேலும் இங்கு கர்ப்பிணி பெண்கள் மற்றும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அந்த மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான தங்கும் இடவசதி குடிநீர் வசதி கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்கிறதா என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் நேற்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அன்பு கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து அங்கு பணியில் இருந்த மருத்துவரிடம் கேட்டறிந்தார்.