சந்திரயான் 3 சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ஹரிகோட்டாவில் இருந்த மத்திய அறிவியல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். சந்திரயான் 2 எந்த இடத்தில் தரை இறக்கப்பட்டதோ, அதே இடத்தில் சந்திரயான் 3ம் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி, உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். இஸ்ரோ தலைவர் சோம்நாத்தும் இந்தியாவிற்கு வாழ்த்து எனக்கூறி, வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார். சந்திரயான் 3 திட்ட இயக்குனர், திருச்சி முன்னாள் மாணவர் வீரமுத்து வேல் இதுபற்றி கூறும்போது அனைத்து விஞ்ஞானிகள் ஒத்துழைப்பால் இது சாத்தியமாயிற்று என்றார்.
புவிவட்ட பாதையில் செலுத்தப்பட்ட சந்திரயான் 3 இயக்கம் திருப்திகரமாக உள்ளதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது. தற்சார்பு இந்தியா திட்டத்தில் சந்திரயான் 3 உருவாக்கப்பட்டதாகவும், இது இந்தியாவிற்கு பெருமை என்றும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.