கவிஞர் வைரமுத்து தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்துக்கள் ஒரு பக்கம் குவிந்த வண்ணம் உள்ளது. அதே நேரத்தில் பாலியல் புகார்களும் அவரது வயதை விட அதிக அளவில் குவிந்துவிடும் போல இருக்கிறது. ஏற்கனவே வைரமுத்து மீது பாடகி சின்மயி புகார் கூறி இருந்தார்.
இந்த வீடியோவை பதிவிட்டுள்ள சின்மயி, வினைதாவை போன்று தமிழக அரசியல் வாதிகளால் ஆதரிக்கப்படும் இந்த தமிழ் கவிஞருக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்கள் முன்வந்து பேச வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த மாதம் பாடகி புவனா சேஷன் என்பவர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை அளித்தது குறித்து வெளிப்படையாக பேசிய நிலையில், தற்போது மேலும் ஒரு பாடகி வைரமுத்து மீது புகார் தெரிவித்துள்ளதால் மீடூ விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.