பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் உத்தரவின் பேரில் வனச்சரக அலுவலர் சுதாகர் தலைமையில் வனவர் பி.ஆனந்தன் வனக்காப்பாளர்கள் S.அபிபிரியா, தஸ்லிமா பசானா ஆனந்தபாபு மற்றும் கா. முருகையன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் கிராமத்தைச் சேர்ந்த சுக்கிரன் என்பவர் அனுக்கூர் ஊராட்சி, குடிக்காடு கிராமத்தில் சந்திரன் என்பவரது பட்டா இடத்தில் கிணறு தோண்டும் போது அங்கு சுற்றித்திரிந்த முயலை வேட்டையாடி சமைக்க வைத்திருந்தார். அப்போது வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டு இணக்க கட்டணம் கட்ட சம்மதித்தால், முயலை வேட்டையாடிய குற்றத்திற்காக அபராதமாக ரூபாய் 10,000 விதித்தனர். மேலும் வனத்துறையினர் தினந்தோறும் சுழற்சி முறையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.