Skip to content
Home » முதல்வர் ஸ்டாலின் தலைமையில்…. திமுக எம்.பிக்கள் கூட்டம் தொடங்கியது

முதல்வர் ஸ்டாலின் தலைமையில்…. திமுக எம்.பிக்கள் கூட்டம் தொடங்கியது

  • by Senthil

தி.மு.க. தலைவரும் முதல்வருமான  மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாயலத்தில் இன்று காலை 10.30 மணிக்கு  திமுக எம்.பி.க்கள் கூட்டம்  தொடங்கியது. இந்த கூட்டத்தில் திமுகவைச் சோ்ந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள் அனைவரும்  கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.  நாடாளுமன்ற கூட்டத்தில் எழுப்பப்பட வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து எம்.பி.,க்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன. குறிப்பாக, கவர்னர் ஆா்.என்.ரவியின் செயல்பாடுகள், பொது சிவில் சட்டம் உட்பட முக்கிய விஷயங்களை எழுப்புவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!