தஞ்சாவூர் அருகே வல்லம் பேரூராட்சியை மாதிரி பேரூராட்சியாக உருவாக்குதல் குறித்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் 100 % வீடு வீடாக குப்பைகள் தரம் பிரித்தல் மற்றும் செயலாக்கம் குறித்தும் உரம் உற்பத்தி மற்றும் சுகாதாரத்தை பராமரித்தல் தொடர்பான பயிற்சி வகுப்பானது தஞ்சாவூர் பாவட்டத்திலுள்ள 19 பேரூராட்சிகளிலுள்ள துப்புரவு ஆய்வாளர், துப்புரவு மேற்பார்வையாளர், தூய்மை பணியாளர் மற்றும் சமூக பரப்புரையாளர் ஆகியோருக்கு கடந்த 04.07.2023 முதல் 13.07.2023 வரை
நான்கு கட்டமாக வல்லம் பேரூராட்சியின் செயல் அலுவலர் ஜெ.கணேசன் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர் ஆர்.வெங்கடேசன் ஆகியோர் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை செயலாக்கம் குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இப்பயிற்சியின் போது வல்லம் பேரூராட்சியின் தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் மகாலெட்சுமி வெங்கடேசன், மன்ற உறுப்பினர்கள் மற்றும் வல்லம் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.