கர்நாடகா அரசு மேகதாதில் அணைக் கட்டுவதற்கு எக்காரணத்தைக் கொண்டும் அனுமதி மத்திய அரசு அளிக்கக் கூடாது.காவிரி தண்ணீர் பங்கீட்டில் உச்சநீதிமன்ற தீர்ப்பினை உடனடியாக அமல் படுத்திட மத்திய அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பினை மதிக்காத கர்நாடகா அரசை நடுவர் மன்றம் உடனடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகி உடனடியாக காவிரியில் தண்ணீர் திறப்பதற்கு ஆணை பெற வேண்டும்.
தமிழக அரசு மேகதாது அணைக்கட்டு பிரச்சனை சம்மந்தமாக தமிழக அனைத்து.
விவசாய சங்கத்தினரையும் உடனடியாக அழைத்துப் பேச வேண்டும் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியில் அமைந்துள்ள ரயில் நிலையம் முன்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பாலசுப்ரமணியம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டடம் நடத்தினர். இதில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது
தண்ணீர் இல்லாமல் காய்ந்து போன கரும்புகளை கையில் ஏந்தி விவசாயிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தினால் மாயனூர் ரயில்வே நிலையம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.