திருச்சி மாவட்டம் சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் நல்லையன். இவர் கடந்த 2008 ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். அவரது பணி ஓய்வின்போது அவரது கணக்கில் இருக்கும் விடுப்பை பணமாக்க லால்குடி சார்நிலை கருவூல முன்னாள் கணக்கர் கிருஷ்ணமூர்த்தியை ஆசிரியர் நல்லையன் அணுகியுள்ளார்.
அதற்கு கிருஷ்ணமூர்த்தி ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆசிரியர் நல்லையன் இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்த கடந்த 17 .3 .2008 அன்று ஆசிரியர் நல்லையன், கிருஷ்ணமூர்த்தி இடம் லஞ்சப்பணம் ரூபாய் 500 கொடுக்கும் பொழுது திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கானது திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது இந்நிலையில் இன்று விசாரணை முடிவு பெற்று திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பளித்தார். அதில் கணக்கர் கிருஷ்ணமூர்த்திக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும் ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஆறு மாதம் சிறை தண்டனையும் அரசு பதவியை தவறாக பயன்படுத்தி கையூட்டு கட்டு பெற்ற குற்றத்திற்காக மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் அபராதத்தை கட்ட தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்ததோடு மேற்கண்ட தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.