Skip to content
Home » தீபாவளி ரயில்…. 2ம் நாள் புக்கிங்…. 10 நிமிடத்தில் டிக்கெட்டுகள் காலி

தீபாவளி ரயில்…. 2ம் நாள் புக்கிங்…. 10 நிமிடத்தில் டிக்கெட்டுகள் காலி

நடப்பு ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, சென்னையில் இருந்து ரெயில் மற்றும் பஸ்களிலேயே அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அந்த வகையில் தீபாவளி முன்பதிவு நேற்று தொடங்கியது. நவம்பர் 9-ந்தேதி (வியாழக்கிழமை) செல்வதற்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆன்லைன் மற்றும் ரெயில் நிலைய கவுண்ட்டர்களில் முன்பதிவு செய்ய ஏராளமானோர் ஆர்வமுடன் காத்திருந்தனர். முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களிலேயே பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன.

குறிப்பாக சென்னையில் இருந்து மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் படுக்கை வசதி டிக்கெட்டுகள், 2-ம், 3-ம் குளிர்சாதன பெட்டிகளின் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.

இந்த நிலையில், நவம்பர் 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் ரெயில் டிக்கெட்கள் விற்று தீர்ந்தன. தென் மாவட்ட ரயில்களில் புக்கிங் தொடங்கிய சில நொடிகளிலேயே வெயிட்டிங் லிஸ்ட் வந்துள்ளதாக பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ் , உழவன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான ரெயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. மீதமுள்ள ஒரு சில ரெயில்களில் வெயிட்டிங் லிஸ்ட் 200ஐ கடந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிகாலை 3 மணி முதல் கவுன்ட்டரில் டிக்கெட் பெற வரிசையில் நின்றவர்கள் டிக்கெட் கிடைக்காததால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கு மாலை மற்றும் இரவு நேரங்களில் சென்னையில் இருந்து கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!