திருச்சி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் கட்டப்படவுள்ள பாலங்களின் அமைவிடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் இன்று நேரில் பார்வையிட்டு தள ஆய்வு மேற்கொண்டார்.
அரிஸ்டோ மேம்பாலம் அருகில் எம்.எஸ்.பி கேம்ப் சாலையில் உள்ள பழமையான மற்றும் குறுகலான ரெயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக திருச்சி சந்திப்பு மற்றும் பூங்குடி ரெயில் நிலையங்களுக்கிடையே புதிய அமைப்பதற்கான இடத்தினையும், சாலை மேம்பாலம்
திருச்சி மாநகரில், ஓடத்துறை காவிரி பாலம் முதல் அண்ணாசிலை மற்றும் கலைஞர் அறிவாலயம் வழியாக மல்லாச்சிபுரம் வரை உயர்மட்ட சாலை அமைப்பதற்கான வழித்தடத்தினையும், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மார்க்கெட், தலைமை தபால் நிலையம் வழியாக ரெயில்வே ஜங்சன் வரை செல்லும் உயர்மட்ட சாலை அமைப்பதற்கான
வழித்தடத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு தள ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து காவிரி ஆற்றில் புதிதாக பாலம் புதிதாக பாலம் அமையவுள்ள இடத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், இன்று நேரில் பார்வையிட்டு தள ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வின்போது கோட்டப்பொறியாளர்கள் கேசவன் (கட்டிடம் மற்றும் பராமரிப்பு ) முருகானந்தம் (திட்டங்கள்) மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.