பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடந்து வருகிறது. பகல்பத்து திருநாளில் 5ம் நாள் விழா இன்று நடக்கிறது. இதையொட்டி நம்பெருமாள் இன்று அதிகாலை பாண்டியன் கொண்டை,ரத்தின காது காப்பு,புஜ கீர்த்தி,விமானபதக்கம்,ரத்தினஅபயஹஸ்தம்,முத்துச்சரம்,அடுக்கு பதக்கம்உள்ளிட்ட பல்வேறு
திருவாபரணங்கள் அணிந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் நம்பெருமாளை வழிபட்டனர்.