அமைச்சா் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 18 மணி நேரம டார்ச்சர் செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மனைவி மேகலா ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியதால் 3வது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி 3வது நீதிபதி கார்த்திகேயன் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.
அமைச்சர் தரப்பில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், என். ஆர் இளங்கோ ஆகியோர் வாதாடினர். அமலாக்கத்துறை சார்பில் அட்டர்னி ஜெனரல் துஷார் மேத்தா வாதாடினார். இன்று துஷார் மேத்தா ஆஜராகி வாதங்களை முன் வைத்தார். அமலாக்கத்துறைக்கு காவலில் எடுத்து விசாரிக்க சட்டம் இல்லை என்றாலும் உரிமை இருக்கிறது. எனவே அவரை புலன் விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என வாதாடினார். மாலையில் அவர் தனது வாதத்தை நிறைவு செய்தார். இந்த நிலையில் பதில் வாதத்திற்காக வழக்கை 3வது நீதிபதி கார்த்திகேயன், வரும் 14ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.எனவே வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணை நடைபெறும்.