கோவை மாவட்டம், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் வாசுதேவன் தலைமையில் விவசாயிகள் தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலத் தலைவர் கூறுகையில்… தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட இடத்தில் விவசாயிகள் தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 10 லட்சத்திற்கு ஏக்கர் மேல் தென்னை விவசாயம் செய்தும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தேங்காய் கொப்பரை விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. நேரடி கொள்முதல் செய்வதாக மத்திய அரசு அறிவித்தாலும் இதுவரை விவசாயிகளிடம் கொள்முதல் செய்யவில்லை மத்திய அரசு, விவசாய நலன் கருதி மத்திய மாநில அரசுகள் உடனடியாக தேங்காய் கொப்பரை விலை ஏற்றம் செய்ய வேண்டும். தேங்காய், கொப்பரைக்கு கிலோ ரூபாய் 140 உயர்த்தி தரவேண்டும். மத்திய அரசு பாமாயில் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டார்.