காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி மக்களவை உறுப்பினர் பதவி பறிப்பிற்குக் காரணமான ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து நாகை மாவட்டம் கீழ்வேளூர் கூத்தூர் ரயில் நிலையம் அருகே காங்கிரசார் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
நாகை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அமர்தராஜா தலைமையில் காங்கிரசார் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழ்வேளூர் காவல்துறையினர் காங்கிரசாரை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போலீசாருக்கும், காங்கிரசாருக்கும் வாக்குவாதம் நடந்தது.
அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து நாகை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்தப் போராட்டத்தின் காரணமாக திருவாரூரில் இருந்து நாகையை நோக்கிச் சென்ற எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் 15 நிமிடம் தாமதமாக நாகை சென்றடைந்தது.