தக்காளி விலை அதிகமாக விற்கும் சூழலில்,பெரம்பலுாரில் உள்ள உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதில் தோட்டக்கலைத்துறையின் மூலம் உழவர் சந்தையில் அமைக்கப்பட்டுள்ள தக்காளி விற்பனை அங்காடியில்,ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்கப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில்….
தக்காளி, வெங்காயம் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு தங்குதடையின்றி குறைந்த விலையில் கிடைப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றது. அதன் ஒரு பகுதியாக உழவர் சந்தையில் தோட்டக்கலைத்துறையின் மூலம் கிலோ ரூ.100க்கு தக்காளி விற்பனை செய்யப்படுகின்றது என தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை இணை இயக்குநர்(பொ) கீதா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சரண்யா, நகராட்சி ஆணையர்(பொ) ராதா, பெரம்பலுார் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.