கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி 23, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மதுபான விற்பனை கேரளாவில் அமோகமாக நடந்துள்ளது. கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 90 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையான நிலையில் இந்த ஆண்டு ரூ.230 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக கேரள மதுபான கழகம் தெரிவித்துள்ளது.