பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல அரசு பள்ளி மாணவர்கள் விடுதி மற்றும் கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கற்பகம் இன்று (11.07.2023) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறையூர்சாலை
பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நல அரசு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் விடுதியினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் விடுதியில் மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் போதிய வசதிகள் உள்ளதா என்பது குறித்தும், மாணவர்களுக்கான உணவு தயாரிக்க போதிய அளவிலான உணவுப்பொருட்கள் இருப்பு உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (பொ) சரவணன், தனி வட்டாட்சியர் (ஆதிதிராவிடர் நலம்) சத்தியமூர்த்தி, பெரம்பலூர் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.