Skip to content
Home » வாங்கிய கடனை திருப்பி தராத அஜீத் ஜென்டில்மேனா? …. தயாரிப்பாளர் குமுறல்

வாங்கிய கடனை திருப்பி தராத அஜீத் ஜென்டில்மேனா? …. தயாரிப்பாளர் குமுறல்

  • by Authour

கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு , இந்திரலோகத்தில் நா அழகப்பன், பார்த்திபன் இயக்கத்தில் வித்தகன் படங்களை தயாரித்தவர் மாணிக்கம் நாராயணன். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்  கூறியதாவது:

அஜித் தனது பெற்றோரை மலேசியாவிற்கு விடுமுறைக்கு அனுப்ப விரும்பி பல வருடங்களுக்கு முன்பு என்னிடம் கடன் வாங்கினார். அப்போது அவர் எனக்கு ஒரு படம் செய்வதாகவும், அவருடைய சம்பளத்தில் இந்த தொகையை சரிசெய்து கொள்லலாம் என்றும் என்னிடம் கூறினார். இன்றுவரை, அவர் பணத்தைத் திருப்பித் தரவில்லை, எனக்குப் படம் செய்து கொடுக்கவில்லை. இத்தனை வருடங்களில் அவர் இதைப் பற்றிப் பேசவே இல்லை. அவர் தன்னை ஜென்டில்மேன் என்று சொல்லிக் கொள்கிறார்.ஆனால் அவர் அப்படி இல்லை.

ஏ.எம்.ரத்னம் போன்ற தயாரிப்பாளர்களும் அஜித் படங்களைத் தயாரிப்பதால் நஷ்டத்தை சந்தித்ததாகவும், இதுவரை அவர்களுக்கு உதவவில்லை என்றும் அவர் கூறினார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு அஜித் இதுவரை பதிலளிக்கவில்லை. இதற்கு முன்பு கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் மீதும் இதே குற்றச்சாட்டு எழுந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *