அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இருப்பதாக குற்றம்சாட்டி, அவரை விடுவிக்கக் வேண்டுமென அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தீர்ப்பளித்த நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி ஆகியோர் இருவேறு தீர்ப்புகளை வழங்கினர்.
மேகலா தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “கைது செய்யும் முன் நோட்டீஸ் அனுப்ப வகை செய்யும் குற்ற விசாரணை முறைச் சட்டம் 41 ஏ பிரிவு, அமலாக்கத் துறைக்கு பொருந்துமா என்பது குறித்து வாதங்களை முன்வைக்க அவகாசம் வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.
என மூன்று கேள்விகளை முன்வைத்து, விசாரணையை ஜூலை 11 மற்றும் 12 ம் தேதிகளுக்கு தள்ளிவைத்தார் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை முதன்மை அமர்வு நீதிமன்றம் நீட்டித்துக் கொள்ளலாம் எனவும் கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு இன்று தொடங்கியது. செந்தில்பாலாஜி மனைவி தரப்பில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கவில்சிபல், காணொளியில் வாதாடினார்.
சட்டவிரோத பணமரிமாற்ற தடை சட்டத்தை அமலாக்கத்துறை மேற்கொள்கிறது. குற்றம் மூலம் பெற்ற பணத்தை வைத்திருந்ததாகேவா, அதை மறைத்திருப்பதாகவோ எந்த ஆதாரமும் இல்லை.
காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை. குற்றம் செய்ததற்கான அனைத்து ஆவணங்களும் இருந்தால் மட்டுமே அமலாக்கத்துறை கைது செய்ய முடியும். விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே கைது செய்ய முடியாது. கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கைதுக்கான காரணத்தை தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் இங்கு அப்படி செய்யப்படவில்லை.
இவ்வாறு தனது வாதத்தை தொடங்கி உள்ளார்.
நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய நிலையில் ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்? என்று நீதிபதி கேட்டார்.