மயிலாடுதுறை அருகே உள்ள விளநகரை சேர்ந்த ஜெய்சங்கர் மகன் ஜெயபிரகாஷ்(25). இவர் விளநகர் வழியாக பள்ளிக்குச் செல்லும் +2 மாணவி ஒருவரை பள்ளிவிட்டுவரும் போது பைக்கில் சென்று வழி மறித்துள்ளார், ஏன் என்னைவிட்டு விலகிச் செல்கிறாய், நான் உன்னை விடமாட்டேன் என்னை காதலித்தே ஆகவேண்டும் இல்லை என்றால் உன்னை ஒழித்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார், இதை எதிர்பாராது விலகி ஓடிய மாணவியை இழுத்துக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு பாலியல் துன்புறுத்தல் செய்தார், இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி வீட்டிற்குச் சென்று பெற்றோரிடம் நடந்ததைக்கூறியுள்ளார்.
இதே இளைஞர் கடந்த 2021ம் ஆண்டு இதே மாணவியை போட்டோ எடுத்து அந்தப்படத்தைக் காட்டி பாலியல் சீண்டல் செய்துள்ளார், இதுகுறித்து மாணவியின் பெற்றோர் செம்பனார்கோவில் போலீசில் புகார் அளித்தனர், போலீசார் விசாரணை செய்து எச்சரித்து எழுதி வாங்கி அனுப்பியுள்ளனர், தற்பொழுது இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை பெற்ற ஆய்வாளர் நாகவள்ளி மாணவியிடமும் ஜெயபிரகாஷிடமும் விசாரணை செய்து ஜெயபிரகாஷ்மீது போக்சோ வழக்குப்பதிவுசெய்து கைதுசெய்தார்., ஜெயபிரகாஷை நாகை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.