திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்புஅகதிகள் முகாம் உள்ளது. இந்த அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள பங்களாதேஷை சேர்ந்த, 23 பேரும், இலங்கையை சேர்ந்த இரண்டு பேரும், ‘தங்களை விடுதலை செய்து, தங்களது நாட்டிற்கு திரும்ப அனுப்பி வைக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.அவர்களிடம் போராட்டத்தை கைவிட வலியுறுத்தி அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்
இந்தபோராட்டத்தின்போது, பங்களாதேஷை சேர்ந்த, 4 பேர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.