Skip to content
Home » மணல் குவாரியில் டிஜிட்டல் சர்வே செய்ய வேண்டும்…. கரூர் கலெக்டரிடம் மனு….

மணல் குவாரியில் டிஜிட்டல் சர்வே செய்ய வேண்டும்…. கரூர் கலெக்டரிடம் மனு….

கரூர் மாவட்டம் தாந்தோணி மலை பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மணல் குவாரிகளின் புகார் குறித்து சமூக ஆர்வலர் முகிலன் கோரிக்கை மனு அளித்தார்.

அப்போது, முகிலன் செய்தியாளர்களுக்குஅளித்த பேட்டியில்….

கரூர் மாவட்டத்தில் மல்லம்பாளையம், நன்னியூர் ஆகிய இரண்டு இடங்களில் காவிரி ஆற்றில் மணல் குவாரி செயப்பட்டு வருகிறது.

நன்னியூர் குவாரியில் 48000 கனமீட்டர் மற்றும் மல்லம்பாளையத்தில் 49600 கன மீட்டர் மணல் எடுக்க அனுமதி பெற்றப்பட்ட நிலையில், தற்போது நிர்ணையிக்கப்பட்ட அளவை விட கடந்த ஆறு மாதத்தில் சுமார் 10 லட்சம் கன மீட்டர் மணல் சட்ட விரோதமாக அள்ளப்பட்டுள்ளது.

மணல் குவாரியில் இருக்க வேண்டிய சிசிடிவி கேமரா பழுதடைந்துவிட்டது என நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

எனவே, மணல் குவாரியில் கடந்த 2017ல் டிரோன் மூலம் டிஜிட்டல் சர்வீஸ் செய்தது போல, தற்போதும் டிஜிட்டல் சர்வே செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், சாலைகளில் 60 முதல் 70 டன்னுக்கு மேல் மணல் லோடு ஏற்றி சென்று வருகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறிய சமூக செயற்பாட்டாளர் முகிலன், கரூர் மாவட்டத்தில் கல்குவாரி மற்றும் மணல் குவாரிகளில் இருக்கும் விதி மீறல்களை கண்டித்து எங்களது அமைப்பு பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தென்னிலைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தென்னிலை பகுதியில் ஆயுதப் பயிற்சி செய்ததாக கரூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கரூர் மாவட்டத்தில் ஆயுதப் பயிற்சி நடைபெற்றால் உளவுத்துறை போலீசாருக்கு எப்படி தெரியாமல் போனது? காவல்துறைக்கு எப்படி தெரியாமல் போனது என தெரியவில்லை. இப்படி மக்கள் பிரச்சனைக்காக போராடும் சமூக ஆர்வலர் மீது இது போன்ற சமூக அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய வகையில் புகார்களை அழித்து வருவது ஏற்புடையதாக இல்லை எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!