கரூர் மாவட்டம் தாந்தோணிமலை பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் என். கருப்பண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர்.
38 ஆண்டுகள் போராடியும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்தபட்சம் ஓய்வூதியம் ரூ 6,750 ஆக விலைப்படியுடன் மற்றும் மருத்துவ காப்பீடு வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது. தேர்தல் வாக்குறுதி 313 ன் படி முறையான சிறப்பு பென்ஷன் ரூ.6,750/ அகவிலைப்படியுடன் வழங்கிட வேண்டும்.
உண்ணாவிரத கூட்ட அமர்வில் ஒப்புக் கொண்ட மருத்துவ காப்பீடு மற்றும் ஈமச்சடங்கு நிதி 25,000 வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.