திருச்சி மாவட்டம், முசிறி தொட்டியம் அருகே நாகையநல்லூர் ஸ்ரீ பகவதி அம்மன் மாரியம்மன் விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு திருப்பணிகள் முடிக்கப்பட்டு பக்தர்கள் பொதுமக்கள் இளைஞர்கள் ஸ்ரீராம சமுத்திரம் காவேரி ஆற்றில் சென்று புனித நீர் எடுத்து வந்து முதல் கால பூஜை இரண்டாம் கால பூஜை மூன்றாம் கால பூஜை நிறைவேற்றி கடம் புறப்பாடு ஏற்பட்டு கோபுர கலசத்திற்கும் மூலஸ்தான பகவதி அம்மனுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது
விழாவில் நாகையநல்லூர் சுற்றியுள்ள 2000 க்கு மேற்பட்ட பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் அன்னதானமும் வழங்கப்பட்டது கும்பாபிஷே விழா ஏற்பாட்டினை நாகையநல்லூர் பொதுமக்கள் ஏற்பாடு செய்தனர்.