கரூர் மாவட்டம், க. பரமத்தி அருகே உள்ள காருடையாம்பாளையம் பகுதியில் ஐ-கிராப் அக்ரிகல்ச்சர் சார்பாக இயற்கை விவசாயத்தில் புரட்சி ஏற்படுத்தும் வகையில் மூன்றாம் ஆண்டு இயற்கை விவசாய கண்காட்சி மற்றும் நாட்டு விதை திருவிழா இன்று தொடங்கி நாளை வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் நாட்டு விதைகளும் அதன் நன்மைகளும், இயற்கை உரங்களும் அதன் பயன்களும், சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், தூவல்நீர் பாசனம் மற்றும் தானியங்கி நீர் பாசனம் செயல்பாடுகள் குறித்தும், அத்தியாவசிய விவசாயம் கருவிகளின் பயன்பாடுகள் மற்றும் செயல் விளக்கங்களும், வீட்டுத்தோட்டம்
மாடித்தோட்டம், புல் தரை அமைத்தல் மற்றும் தோட்ட பராமரிப்பு, மரக்கன்றுகள், பழக்கன்றுகள் மற்றும் அழகு செடிகள் போன்றவற்றை பற்றி விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் கரூர் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர்.