கர்நாடகாவில் நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தொடரில் கர்நாடக மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை முதல்வரும் நிதியமைச்சருமான சித்தராமையா தாக்கல் செய்தார். முன்னதாக, 2013 முதல் 2018 வரை 6 பட்ஜெட்டுகளை அவர் முதல்வராக இருந்தபொழுது தாக்கல் செய்துள்ளார். இது அவரது ஏழாவது பட்ஜெட் ஆகும். அந்த பட்ஜெட்டில், மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பட்ஜெட்டை தாக்கல் செய்து முதல்-மந்திரி சித்தராமையா கூறுகையில், விரைவில் மேகதாது அணை கட்ட மத்திய அரசின் அனுமதியை பெற நடவடிக்கை எடுக்கப்படும். மேகதாது சமன்படுத்துதல், குடிநீர் திட்டத்துக்கான அனுமதி பரிந்துரை மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. மேகதாது அணை திட்டம் தொடர்பாக அனுமதி கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அணை கட்ட தேவையான நிலங்களை அரசு கையகப்படுத்த நடவடிக்கையை முதன்மையாக செயல்படுத்தப்படும்.
மேகதாது அணைக்கான சுற்றுசூழல் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என முதல்-மந்திரி சித்தராமையா பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.