முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 பெண்களுக்கு 100 பரிசோதனை செய்யும் உலக சாதனை முகாம் இன்று ரிப்பன் பில்டிகிங் அம்மா மாளிகையில் நடைபெற்றது.
டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் “வருமுன் காப்போம் மருத்துவ முகாம்” நினைவாக முழு உடல் பரிசோதனையின் புதிய முயற்சியாக 100 பெண்களுக்கு 100 முழுமையான பரிசோதனை செய்து லிங்கன் ரெக்கார்ட் சாதனை நிகழ்த்தும் மருத்துவ முகாம்
நிகழ்ச்சியை திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்வில், சென்னை மாநகராட்சி மேயர் இரா.பிரியா ராஜன், திமுக தலைமைக் கழக செய்தி தொடர்பு அணித் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் முன்னாள் எம்.பி, தி.மு.கழக மகளிரணி இணைச் செயலாளர் குமரி விஜயகுமார்,திமுக மகளிரணி பிரச்சாரக்குழு செயலாளர் மாலதி நாராயணசாமி, Lincoln book of Records தலைவர் ஜோசப் இளந்தென்றல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.