Skip to content
Home » கவிதை-கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய கலெக்டர்….

கவிதை-கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய கலெக்டர்….

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் மேனிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவியர்களுக்கிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்டம் வாரியாக பள்ளி – கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கவிதை. கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேனிலைப் பள்ளிகளில் 11,12ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர்களிடையே 2022-2023 ஆம் ஆண்டிற்குரிய மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் 26.06.2023 அன்று திருச்சி, தெப்பக்குளம் பிஷப்ஹபர் மேனிலைப் பள்ளியில் நடைப்பெற்றது.

கவிதைப் போட்டியில் திருச்சி காவிரி மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவி நித்யஸ்ரீ முதல் பரிசும், மேலப்புதூர், புனித அன்னாள் பெண்கள் மேனிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஸ்வர்ணமால்யா இரண்டாம் பரிசும், தெப்பக்குளம், புனித சிலுவை பெண்கள் மேனிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவி கிஃப்டி மூன்றாம் பரிசும் பெற்றனர். கட்டுரைப் போட்டியில், இனாம் மாத்தூர், அரசு மேனிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவி வினோதினி முதற்பரிசும், மண்ணச்சநல்லூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவி பிரதீபா இரண்டாம் பரிசும், பொன்மலை புனித சிலுவை மகளிர் மேனிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஸ்ரீநேகா மூன்றாம் பரிசும் பெற்றனர். பேச்சுப் போட்டியில், மேலப்புதூர், புனித அன்னாள் பெண்கள் மேனிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவி கூமுத்துசாந்தினி முதற்பரிசும், கைலாசபுரம் பாய்லர் பிளாண்ட் பெண்கள் மேனிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவி யாழினி இரண்டாம் பரிசும், தெப்பக்குளம் புனித சிலுவை பெண்கள் மேனிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவி கீர்த்தி ரியோ மூன்றாம் பரிசும் பெற்றனர்.

பள்ளி மாணவ, மாணவியர்களிடையே நடத்தப்பெற்ற கவிதை, கட்டுரை. பேச்சுப் போட்டிகளில், ஒவ்வொரு போட்டிக்கும் முதல்பரிசு ரூ.10,000/-, இரண்டாம் பரிசு ரூ.7,000/- மூன்றாம் பரிசு ரூ.5,000/- என்ற வகையில் வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தம் ரூ.66,000/- காசோலைப் பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் வழங்கிச் சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!