காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி என்ற இனத்தை குறித்து பேசியதாக அவர் மீது குஜராத் மாநிலம், சூரத் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் செசன்ஸ் கோர்ட், ராகுல் காந்திக்கு 2 வருட சிறை தண்டனை வழங்கியும், ராகுலின் எம்.பி. பதவியை பறித்தும் அதிரடியாக உத்தரவிட்டது.
இதைத் எதிர்த்து ராகுல் குஜராத் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். அப்பீல் மனுவை நீதிபி ஹேமந்த் பிரச்சக் விசாரித்து வந்தார். இந்த வழக்கில் இன்று நீதிபதி , ராகுல் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ராகுலின் சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்கவும் நீதிபதி மறுத்து விட்டார்.