திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகத்தில் செயற்கை நுண்ணறிவில் 5 வகையான ரோபோட்டிக் செய்து அசத்திய மாணவர்கள்.
மண்ணச்சநல்லூர் அரசுப் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் அனைத்து பாடப்பிரிவு மாணவர்களின் திறமையை எலக்ட்ரானிக் துறையில் மேம்படுத்துவதற்காக அடல் டிங்கரிங் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த ஆய்வகத்தில் 9, 11,மற்றும் 12 ம்
வகுப்பு மாணவர்கள் செயற்கை நுண்ணறிவில் என்னைப் பின் தொடர், தடைகள், ஜாய்ஸ்டிக், வயர்லெஸ், வாகனம் உள்ளிட்ட 5 வகையான ரோபோட்டிக் செய்துள்ளனர்.
இதில் என்னை பின் தொடர் ரோபோ மனிதனை பின்தொடர அடிப்படையாகவும், பள்ளி மாணவர்களுக்கு பைகளை தூக்கவும் உதவுகிறது. இதில் அல்ட்ராசோனிக் சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது. தடைகள் ரோபோ ஒரு பொருள் கண்டறியப்பட்டால் ரோபோ தானாகவே அணைக்கப்படும். இது விலங்குகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்க ரயில் பாதைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஜாய்ஸ்டிக் ரோபோ ரோபோட் ஏறும் ரோபாட்டிக்ஸ் பொறிமுறைக்காக மாணவர்களால் உருவாக்கப்பட்டது. ஜாய்ஸ்டிக் மூலம் கட்டுப்படுத்தப்படும். வயர்லெஸ் ரோபோட் ரோபோவின் செயல்பாட்டு பொறிமுறையானது முழு வயர்லெஸ், ப்ளூடூத் தொடர்பை பயன்படுத்துகிறது. மற்றும் போக்குவரத்து விருந்தினர்களை வரவேற்பது மற்றும் பொருட்களை பராமரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. ரோபோடிக் வாகனம் ஏதேனும் கூடுதல் தடைகளை கண்டறிந்தால் வாகனம் தானாக அணைந்து விடும். தீ பொருத்தும் பாட்டில் விசேஷமாக வேலை செய்யும். ரோபோ ஏதேனும் நெருப்பு உணர்வில் பாட்டில் தானாக முன்நோக்கி வந்தால் எதிர்கால முன்னேற்ற மீட்பு நோக்கத்திற்காக இந்த பாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதற்கான பயிற்சிகளை பள்ளியின் அறிவியல் ஆசிரியை திருமதி கவிதா மேற்பார்வையில்
திருச்சி நியூ புரொபெல்லர் டெக்னாலஜியைச் சேர்ந்த 2 பயிற்சியாளர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். இந்த ஐந்து வகையான ரோபோக்களை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளி வளாகத்தில் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டு ரோபோக்கள் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. சிறப்பாக 5 ரோபோக்களை உருவாக்கிய மாணவர்களையும் பயிற்சி கொடுத்த பயிற்சியாளர்களையும் மேற்பார்வையாளராக செயல்பட்ட அறிவியல் ஆசிரியை திருமதி கவிதாவையும் பள்ளி தலைமை ஆசிரியர் தண்டபாணி மற்றும் ,ஆசிரியர்கள் மாணவர்கள் வெகுவாக பாராட்டி வாழ்த்தினார்கள்.