தென் ஆப்பிரக்காவில் புலம் பெயர்ந்த மக்களின் சுதந்திரத்திற்காக 1906ல் காந்தி முதன்முறையாக சத்தியாகிரக போராட்டத்தை துவக்கினார் இந்தப் போராட்டத்தில் 18 வயதில் உயிர்நீத்த முதல் இந்திய சத்தியாகிரக போராளி சாமி நாகப்ப படையாட்சியாவார். இவர் மயிலாடுதுறை மாவட்டத்தின் மண்ணின் மைந்தர். பிற்காலத்தில் காந்தி நடத்திய போராட்டத்திற்கு உந்து சக்தியாக இருந்தவர் சாமிநாகப்பபன் படையாட்சி. ஜோகன்னஸ்பர்கில் காந்தியின் வேண்டுகோளை ஏற்று நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட இவர் 10நாள் கடுங்காவல் சிறைதண்டனை பெற்று சித்திரவதைபட்டு 1909ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி மரணமடைந்தார். காந்தியால் புகழப்பட்ட அவரது 114 வது நினைவு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த அவருடைய திருஉருவப்படத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் புகழஞ்சலி செலுத்தினர்.