Skip to content

பெரம்பலூர் அருகே முதியவர் லாரி சக்கரத்தில் விழுந்து பலி…

பெரம்பலூரை அடுத்த நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி வயது 70 உடைய இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜூலை 6 ஆம் தேதி இரவு 7 மணியளவில்  கந்தசாமி நெடுவாசல் பேருந்து நிறுத்ததில் அமர்ந்துள்ளார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த முருகேசன் என்பவர் அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை கைகாட்டி நிறுத்தியுள்ளார். முருகேசனை ஏற்றிக்கொண்ட ஓட்டுநர் லாரியை நகர்த்தியபோது லாரியின் பின் சக்கரம் கந்தசாமி  மீது ஏறி இறங்கியதில் கந்தசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

சம்பவ இடத்திற்கு வந்த மருவத்தூர் போலீசார் நடத்திய விசாரணை மேற்கொண்டதில் முருகேசனை லாரி ஓட்டுநர் ஏற்றி கொண்டு  நகர்த்திய பொது எதிர்பாராவிதமாக லாரியின் பின் சக்கரத்தில் தவறி விழுந்ததில்  கந்தசாமி உயிரிழந்ததாக  விசாரணையில் தெரிய வருகிறது. மேலும் இறந்த கந்தசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார்.இது தொடர்பாக டிப்பர் லாரி ஓட்டுநர் செல்வகுமார் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *