மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் முக்கூட்டில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது அக்கடையில் உதவி விற்பனையாளராக பணியாற்றும் ரவிச்சந்திரன் என்பவர் பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மோசடி நடவடிக்கைகளை தடுத்தல் மற்றும் கண்டுபிடிப்பதற்கான விதி தொகுப்பு 2014-இன்கீழ் அரசு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ரவிச்சந்திரனை தற்காலிக பணிநீக்கம் செய்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உத்தரவு யிறப்பித்துள்ளார்.