Skip to content

ஆழியார் கவியருவியில் திடீர் காற்றாற்று வெள்ள பெருக்கு…. சுற்றுலா பயணிகளுக்கு தடை..

கடந்த இரண்டு நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான வால்பாறை கவரகள் சத்திய ஸ்டேட் பகுதிகளில் மலை தொடர்ந்து பெய்து வருவதால் பொள்ளாச்சி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆழியாறு குரங்கறிவி எனப்படும் கவியரவில் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக இந்த அருவி மிகவும் பிரபலமானது என்பதால் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் வெளி மாநிலத்திலிருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்வார்கள். இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களாக வெயிலின் தாக்கத்தினாலும் வறட்சியினாலும் கவியருவி தண்ணீர் இன்றி மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிக அளவில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையின் காரணமாக கவி அருவியில் திடீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கவியருவியில் மீண்டும் தண்ணீர் வருவதனால் ஆறு மாதங்களுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படுமா

என வால்பாறை பகுதிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர். இந்த நிலையில் ஆனைமலை புலிகள் காப்பக பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி கூறுகையில் அருவியில் கொட்டும் நீர் வரத்தை பொறுத்து சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கப்படுவர் தொடர்ந்து மழை நீடித்தால் வெள்ளப்பெருக்கு தொடர்ந்தால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து மழை நீடித்து வருவதால் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சுற்றுலா பயணிகள் கொண்ட ஊசி வளைவுகளில் உள்ள சாலைகளில் வாகனங்களை நிறுத்தக் கூடாது எனவும் வனத்துறை சார்பில் அறிவுறுத்தி வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் நலன் கருதி ஆனைமலை புலிகள் காப்பக பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி தலைமையில் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!