தேனி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ரவீந்திரநாத். இவர் ஓபிஎஸ் மகன் ஆவார். தற்போது ஓபிஎஸ்சுடன் இவரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இவரது வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வாக்காளர் மிலானி என்பவர் இந்த வழக்கை தொடர்ந்தார். வேட்புமனுவில் சொத்து உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை அவர் மறைத்து விட்டார். எனவே அவரது வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என வழக்கில் கூறி இருந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் ரவீந்திரநாத் எம்.பி. வெற்றி செல்லாது என நீதிபதி சுந்தர் தீர்ப்பளித்தார். அதிமுகவுக்கு மக்களவையில் இருந்த ஒரே ஒரு எம்.பியின் வெற்றியும் செல்லாது என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேல்முறையீடு செய்ய வசதியாக இந்த தீர்ப்பு 30 நாட்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. ரவீந்திரநாத்தை எதிர்த்து இந்த தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். ரவீந்திரநாத் 76,319 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.