முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினின் சகோதரர் டாக்டர் ராஜமூர்த்தி இல்ல திருமண விழா இன்று சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடந்தது. விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது முதல்வர் பேசியதாவது:
“வள்ளலாரைப் பற்றி ஒருவர் உளறிக்கொண்டிருக்கிறார்; அவர் யாரென்று பேச விரும்பவில்லை. இந்திய நாட்டுக்கு ஒர் நல்ல ஆட்சி தேவை. மதம், சனாதனம் பற்றி மக்களிடையே திணித்து சர்வாதிகார ஆட்சியை பாஜக நடத்தி வருகிறது. பொது சிவில் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகளை மற்றும் பாஜகவை எதிர்ப்பவர்களை சிபிஐ, ஐடி, அமலாக்க துறையை வைத்து மிரட்டுகிறார்கள். தேர்தல் வாக்குறுதிகள் எதையும் அவர்கள் நிறைவேற்றவில்லை.
தமிழ்நாட்டில் திராவிடமாடல் ஆட்சி எழுச்சியோடு நடைபெற்று வருகிறது. அதுபோன்ற ஒரு திராவிட மாடல் ஆட்சி இந்தியாவுக்கும் வேண்டும். மத்தியப் பிரதேசத்திற்கு சென்றாலும் பிரதமருக்கு திமுக ஞாபகம்தான் வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.