பல ஆண்டுகளாக டுவிட்டர் செயலி இலவசமாக செயல்பாட்டில் இருந்த நிலையில், அண்மையில் அதனை உலககோடீஸ்வர்களில் ஒருவரான எலான் மஸ்க் வாங்கினார். சந்தா செலுத்தினால்தான் பிரத்யேக சேவைகள் கிடைக்கும் என்று டுவிட்டர் அறிவித்தது பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும், தேவையற்ற பதிவுகளை குறைக்கவும், தரவுகள் வீணாவதை குறைக்கும் வகையிலும் டுவிட்டர் பதிவுகளை பார்க்க மஸ்க் அண்மையில் கட்டுப்பாடுகளை விதித்தார்.
இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்துக்கு போட்டியாக பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, புதிதாக திரெட்ஸ் என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. டுவிட்டருக்கு போட்டியாக மெட்டா களமிறக்கியுள்ள திரெட்ஸ் சமூக வலைதளம் இந்தியாவில் வெளியான சில மணி நேரங்களிலேயே, 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பயனர்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் கணக்கை வைத்து இதனை லாகின் செய்து கொள்ளலாம், 500 எழுத்துக்கள் வரை உபயோகிக்கலாம் என கூறப்படுகிறது. டுவிட்டருக்குப் போட்டியாக களத்தில் இறங்கிய மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் திரெட்ஸ் டுவிட்டரில் டிரெண்டிங்கில் உள்ளது.