செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 5 சிறார்கள் தப்பி ஓட்டம் என தகவல் வௌியாகியுள்ளது. ஆசிரியர்கள் குணசேகரன், பாபு ஆகியோர் 5 சிறார்களை தடுக்க முயன்றுள்ளனர். அப்போது ஆசிரியர்களை செங்கலால் தாக்கிவிட்டு சிறார்கள் தப்பி ஓடிவிட்டனர். படுகாயமடைந்த இருவரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தப்பி ஓடிய 5 சிறார்களை செங்கல்பட்டு நகர போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.