சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இதை எதிர்த்து அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நேற்று நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர்.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி இவ்வழக்கை விசாரிக்க 3வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். இவரது முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நாளை பிற்பகல் 2.15 மணிக்கு நடைபெற உள்ளது.