திருப்பூர் அருகே உள்ள விஜயாபுரத்தை சேர்ந்த 6 வயது சிறுமி திவ்யதர்ஷினி. இவர் இன்று நல்லூர் அருகே காவல்துறை வாகனம் மோதி உயிரிழந்தார். இதனால் காவல்துறை வாகனத்தை சிறைப்படுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.