திருச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் திருச்சி நீதிமன்றம் முன்
மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
போராட்டம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:
வழக்கறிஞர்களின் சேமநல நிதியை 10லட்சத்திலிருந்து 25லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், வழக்கறிஞர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை உடனே ஏற்ற வேண்டும், வழக்கறிஞர் நந்தகுமார் மீது பார் கவுன்சில் எடுத்துள்ள ஒரு தலைபட்சமான நடவடிக்கை உடனே திரும்ப பெற வேண்டும், வரும் 14ம் தேதிக்குள் நந்தகுமார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெறாவிட்டால் பார் கவுன்சில் நடைபெறும் விசாரணைக்கு அனைத்து வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் ஆஜராவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து வழக்கறிஞர்களும் வழக்கு விசாரணையில் ஆஜராவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.