திருச்சி உறையூர் மருதாண்டக்குறிச்சியில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. நேற்று காலையில் இந்த அலுவலகத்துக்கு வருமான வரித்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் திடீரென வந்தனர். திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வந்தனர். இவர்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
மதியம் 12 மணிக்கு தொடங்கிய சோதனை விடிய விடிய நடந்தது. இன்று மதியம் தான் சோதனை முடிந்தது. இந்த சோதனையில் உறையூர் அலுவலகத்தில் ரூ.1000 கோடிக்கு மேல் கணக்கு காட்டவில்லை என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
இதுபோல செங்குன்றத்தில் நடந்த ஐடி ரெய்டில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு பத்திரப்பதிவு கணக்கு காட்டப்படவில்லை என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக மேல் விசாரணைக்கு அதிகாரிகள் அழைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
A