அரியலூர் அருகே உள்ள கீழவிளாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன் இவர் மரம் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு ஆதிச்சநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலத்துடன் கீழ விளங்குடியில் உள்ள தனது வீட்டில் மது அருந்தி உள்ளனர். மது போதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த அறிவழகன் போதையில் வெங்கடாசலம் என்பவரை அரிவாளால் வெட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்று போதையில் நடந்ததை கூறியுள்ளார். கொலை செய்யப்பட்ட வெங்கடாசலத்தை வீட்டில் அருகில் உள்ள மனலில் புதைத்து அதன் மேல் விறகுகளை அடுக்கி வைத்திருப்பதாக போதையில் கூறியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த வெங்கடாசலத்தின் உறவினர்கள் தேளூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில் குற்றவாளி அறிவழகனை போலீசார் கைது செய்தனர். மேலும் சடலம் புதைக்கப்பட்டிருந்ததால் அரியலூர் வட்டாட்சியர் கண்ணனுக்கு தகவல் தெரிவித்தனர் இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் முன்னிலையில் புதைக்கப்பட்டிருந்த வெங்கடாசலத்தின் உடலை போலிசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் அறிவழகனிடம் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது