ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ஜா மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் கராமி முர்மு. இவரது கணவர் முசு தமிழ்நாட்டில் பணிபுரிகிறார். கராமி முர்முவுக்கு சமீபத்தில் 2-வது பெண்குழந்தை பிறந்தது. வறுமை காரணமாக அந்தக் குழந்தையை வளர்க்கமுடியாது என்று நினைத்த பெண் கராமி முர்மு, குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு அதை ரூ.800-க்கு விற்றுவிட்டார். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த கணவர் முசு, புதிதாக பிறந்த 2-வது குழந்தை பற்றி கேட்டுள்ளார். அப்போது, குழந்தை இறந்துவிட்டதாக கராமி முர்மு பொய் கூறியுள்ளார். அதனால் கணவர் முசு போலீசில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில், புதிதாக பிறந்த பெண்குழந்தையை ரூ.800-க்கு ஒரு குழந்தையில்லாத தம்பதிக்கு விற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக குழந்தையின் தாய் கராமி முர்மு, அதை வாங்கிய தம்பதி, அதற்கு ஏற்பாடு செய்த நபர் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.